Anonymous and Deepweb 



Anonymous and Deepweb 

(உலகையே திரும்பிப்பார்க்க வைத்த சாதாரண மனிதர்களின் அசாதாரமான கூட்டமைப்பு )

Anonymous என்பது ரகசியமான இணையதள மற்றும் கணினி hacker களின் உலகளாவிய கூட்டமைப்பு . இது முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு 4chan என்னும் இணையதளத்தில் இணைய பயனிட்டாளர்கள் அவர்களது அடையாளத்தை மறைத்து பயன்படுத்த உருவான சொல் .

இணையத்தில் இவர்கள்தான் ராஜா என்றே சொல்லலாம் முதன்முதலில் இவர்கள் உலகளாவில் பிரபலமானது scientology என்னும் நவீன யுக மதத்தை பற்றி பிரபல ஹாலிவுட் நடிகர் Tom Curise புகழ்த்து பேசிய காணொளியை அந்த scientology database இல் இருந்து hack செய்து வெளியிட்டதே ஆகும் .

அதன் பிறகு இணையம் முழுவதும் அரசாங்க தவறுகளுக்கு எதிராக கொடி பிடித்து பல அரசு இணையங்களையும் கூட முடக்கி உள்ளனர் .

இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு தலைமை இடமும் இல்லை . . . ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு சில Anonymous நபர்கள் சேர்ந்து அதை எதிர்த்து போராடுவார்கள். சம்பந்தப்பட்ட இணையத்தை DDos attack மூலம் முடக்கி விடுவார்கள் .இந்த குழுமத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாததால் இந்த குழுவை இன்று வரை எந்த அரசாலும் முடக்க முடியவில்லை . உலகம் முழுவதும் Anonymous நபர்கள் இருக்கிறார்கள் .

Wikileaks பல அரசாங்க முறைகேடுகளை வருசையாக வெளி  வந்து கொண்டிருந்த பொழுது paypal ,Mastercard மற்றும் visa போன்ற பண பரிமாற்றம் செய்யும் சேவைகள் wikileaks உடன் சேவைகளை நிறுத்திகொண்டன . wikileaks முழுவதும் இயங்கிவந்ததே நன்கொடைகளின் மூலம் தான் paypal ,Mastercard மற்றும் visa போன்ற நிறுவனங்கள் wikileaks உடன் சேவையை நிறுத்தியதால் நன்கொடை வருவதற்கான வலி முற்றிலும் துண்டிக்கப்பட்டது .அப்பொழுது wikileaks இணையத்திற்கு பக்கபலமாக இருந்து paypal ,Mastercard மற்றும் visa போன்ற நிறுவனங்களின் இணையங்கள் மீது DDOs தாக்குதல் செய்தது ஒரு Annoymous கும்பல் .

இப்படியாக பல சமுக சீர்திருத்தங்களுக்காக இணையத்தில் இன்றுவரை போராடி வருவது Annoymous இயக்கம் தான் .இன்றளவும் கூட ISIS தீவிரவாதிகளின் பல இணையங்கலை முடக்கி உள்ளது .

ஆனாலும் Annoymous இல்லுமினாட்டிகளின் கட்டுபாட்டில் இயங்கி இணையத்தை கட்டுபடுத்த உதவும் ஒரு கும்பலே என்ற கருத்தும் நிலவுகிறது ... 

என்ன இருந்தாலும் அடையாளத்தை மறைத்து உண்மைக்கும் உரிமைக்கும் குரல் கொடுத்தால் நீங்களும் ஒரு Annoymous தான் .

நீங்கள் ஒரு சிறு எண்ணிக்கை உடைய குழுவை இணைத்து கொண்டு உங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு (Guy Fawkes mask அணிந்துகொண்டு )ஒரு நல்ல நோக்கத்துக்காக ஒரு இணையத்தை தாக்கினாலோ இல்லை இணையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலோ நீங்களும் Annoymous தான் .

இன்றைய உலகில் illuminati , mason போன்ற உலகை ஆழும் கும்பல்களின் செயலை இணையத்தில் மற்றும் Deep Web இல் எதிர்த்து குரல் கொடுப்பது Annoymous குழுவே ஆகும் ..

Deepweb என்பது தனி உலகம் ஆகும் இது வரை சாதாரண இணையத்தில் நீங்கள் பார்க்க இயலாத வரையறுக்க படாத பல இணையங்கள் இந்த deepweb குள் தான் இருக்கின்றன . இது நாம் பயன்படுத்தும் இணையத்தை விட மிகப் பெரியது .. இந்த deepweb இணையங்களில் அதிகமாக என்ன நடக்கிறது என்று தெரியுமா ? போதை பொருள் விற்பனை (என்ன போதை பொருளாக இருந்தாலும் சரி ), ஆயுதங்கள் விற்பனை , Hitman service (ஒருவரை கொலை செய்ய கூட நீங்கள் ஆட்களை நியமித்து கொள்ளலாம்) .. இன்னும் பல விடயங்கள் அருவருக்கத் தக்கவை உங்கள் கற்பனைக்கு எட்டாதவை அனைத்தும் இதில் அடக்கம் அவற்றை பற்றி கூற வார்த்தை இல்லை என்று வைத்துகொள்ளுங்கள் .

Deepweb இணையங்களை எப்படி பயன்படுத்துவது ? ஏன் இந்த இணையங்கள் சாதாரண google தேடலில் வரவில்லை ?

பொதுவாக நீங்கள் இணையத்தில் எதை எப்படி பயன்படுத்தினாலும் அனைத்தும் பதிவாகிக்கொண்டே இருக்கும் உங்கள் browser history அளித்தால் உங்கள் கணினியில் இருந்து மட்டுமே அழியும்...ஆனால் உங்கள் IP address மூலம் அனைத்தும் அரசுகளால் பதிவு செய்யபடுகின்றன  .இந்த deepweb இணையங்களை பயன்படுத்த நீங்கள் உங்கள் IP address மாறிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சேவையை tor என்னும் browser செய்து குடுக்கும் . எனவே இந்த browser மூலம் நீங்கள் deepweb உள்ளே நுழையலாம் .

நீங்கள் இது வரை பார்க்காத இணைய உலகத்தை அதில் பார்ப்பிர்கள் , ஆம் உலகம் அமைதியானது பாதுகாப்பானது என்ற எண்ணம் உடையவர்கள் ஒரு முறை deepweb இணைய தளங்களை பார்த்தால் நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று தெரியும் .

இந்த இணையங்கள் .onion என்று முடிவு பெரும் .. .clos மற்றும் .i2p என்ற இணையங்களும் உண்டு . இந்த இணையங்கள் முழுவதும் hacker கள் , அமெரிக்க FBI அதிகாரிகள் தான் அதிகம் .சிறிது நீங்கள் உங்கள் அடையாளத்தை இதில் வெளிகாட்டிகொண்டாலும் உங்களுக்கு ஆபத்து தான் . உலகின் பெரும் Hacker களின் கூட்டம் இங்கே தான் சுத்தி கொண்டிருக்கும் . தீவிரவாதிகளுக்குள் தொடர்பு தகவல் பரிமாற்றம் அனைத்தும் இங்கே தான் நிகழும் .

அமெரிக்க Navy தான் tor bundle சர்வீஸ் ஐ துடங்கி உள்ளது .

deepweb இவ்வளவு மோசமா ?

இல்லை wikileaks தமது தகவல்களை முதலில் deepweb இல் தான் வெளி இடும் .

Annoymous நபர்கள் தங்களுக்கு தொடர்பை இங்கே தான் மேற்கொள்ளுவார்கள் . தற்பொழுது deepweb இல் உள்ள ஒரு சில தவறான இணையங்களின் மீது Annoymous நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

2012 இல் அரபு நாட்டில் நடந்த மக்கள் புரட்ச்சிக்கு தகவல்கள் deepweb இல் தான் பரிமாறிக்கொள்ளபட்டது .

அரசாங்க உழல்கள் , மறைக்கப்பட்ட வரலாறு என நாம் தெரிந்து கொள்ள சில நல்ல விடயங்களும் இதில் உண்டு ... 

Comments

Popular posts from this blog

டைட்டானிக் மர்மங்கள்

Subliminal Messages

இலுமினாட்டி