Skull and Bones

பகுதி-4

இரகசிய குழுமங்கள் - Skull and Bones

அமெரிக்காவில் New Haven என்னும் இடத்தில் yale பல்கலைகழகத்தில் 1832 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது Skull and Bones என்னும் ரகசிய குழு . 
இந்த Skull and Bones குழுவை பற்றி பார்க்கும் முன் இது தொடங்கபட்ட Yale University பற்றி சிறிது பார்ப்போம் .இந்த Yale University தான் அமெரிக்காவின் மூன்றாவது பழமையான பல்கலைகழகம் ஆகும் .இதை தொடங்கியவர் Elihu Yale இவர் தான் இந்தியாவை ஆண்ட British East India கம்பெனி யின் governer ஆவார் .

சரி நாம் Skull and Bones குழுவை பற்றி பார்ப்போம் இந்த குழு 1832 ஆம் ஆண்டு Yale University குள் தொடங்கப்பட்டது . இது ரகசியமாக செயல்படும் குழு ஆகும் .வருடத்தில் ஒரு நாள் இவர்கள் புது நபர்களை சேர்த்து கொள்வார்கள் . அதுவும் அந்த பல்கலைகழக மாணவர்கள் மட்டும் தான். அந்த பல்கலைகழக மாணவனாக இருந்தாலும் அவர்கள் விருப்பபட்டவர்களை மட்டுமே இணைத்து கொள்வார்கள் . 1990கல் லில் இருந்து தான் இதில் பெண் உறுப்பினர்கள் சேர்க்கபட்டார்கள் .வருடத்திற்கு 15 ஆண்கள் மட்டும் ஒரு பெண் மட்டுமே இந்த குழுவில் இணைக்க படுவார்கள் . இவர்களின் செயல்பாடு ,நடவடிக்கை அனைத்தும் ரகசியமாக இருக்கும் . இந்த குழுவின் மெம்பர்களை Bonesman, என்று அழைப்பார்கள் .

இந்த குழு நபர்கள் கூடும் இடத்தின் பெயர் "TOMB " இந்த கட்டிடம் பெயர்க்கு ஏற்றாற்போல் எகிப்த்திய கட்டிடக்கலையில் காணப்படும் . Skull and Bones கட்டிடங்கள் அனைத்து மூத்த குழு நபர்களால் நிர்வகிக்கப்படும் . இந்த குழுவின் செயல்பாடுகளில் Yale University-ஐ நினைத்தாலும் தலையிடமுடியாது . TOMB கட்டிடத்தில் தான் அமெரிக்காவின் எதிர்காலமே வரையருக்கபடுகிறது என்று கூறலாம்.

அமெரிக்காவில் Deer Island (Thousand Islands) என்னும் தீவுகூட்டமே இந்த ரகசிய குழுவிற்கு சொந்தம் என்ற செய்திகளும் வெளிவருகின்றன .
இந்த Yale University உள்ளே பல ரகசிய பாதாள நடைபாதைகள் மற்றும் அறைகள் உள்ளன என்றும் அவை இந்த Skull and Bones நபர்களால் மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்றும் அங்கு படிக்கும் மாணவர்கள் தகவல் வெளியிட்டனர் . Martin Van Buren, Geronimo, மற்றும் Pancho Villa போன்ற அறிஞ்சர்களின் மண்டை ஓடுகளை இந்த குழுவினர் திருடி ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது .இவர்கள் ரகசியமாக சாத்தைனையும் வழிபடுவார்கள், நரபலி போன்ற விடயங்களும் இவர்கள் வழிபாடு பொழுது நடக்கும் என தெரியவருகிறது .

மண்டை ஓடும் அதன் கீழ் இரண்டு எலும்புகள் குறுக்காக வைக்கப்பட்டு கிழே 322 என்று எழுதி இருப்பது இவர்களின் சின்னமாகும் . பல ரகசிய சாத்தான் வழிபாடுகளை இவர்கள் மறைமுகமாக வழிபட்டு வந்துள்ளனர் . ஐரோப்பாவின் ராஜ குடும்பங்களை சேர்ந்த மனிதர்கள் மட்டுமே ரகசியமாக இதில் இணைக்கபடுகிரார்கள் என்றும் வாதங்கள் நடைபெறுகின்றன .ஐரோப்பாவின் ராஜ குடும்பங்கள் தங்கள் வாரிசுகளின் அடையாளத்தை மறைத்து இது போன்ற ரகசிய குழுக்களில் அவர்களை சேர்த்து பயிற்சி குடுப்பதாகவும் கருதப்படுகிறது . 

சரி இந்த குழுவில் இருந்த நபர்கள் எதிர்காலத்தில் என்ன ஆனார்கள் ?
அது தெரிந்தால் உங்கள் தலை சுற்ற துடங்கிவிடும்..

ஆம் இந்த குழுவின் மெம்பர்கள் தான் பின்னாளில் அமெரிக்க நாட்டின் பல இடங்களில் தலைமை நிதிபதி , ராணுவ தளபதி , இதே பல்கலைகழகத்தின் பேராசிரியர் ,அமெரிக்காவின் வெளிநாட்டு தொடர்பு பிரதிநிதி, வரலாற்று அறிஞ்சர் , வங்கி கவேர்னர், ஏன் அமெரிக்க ஜனாதிபதி என நாட்டின் மிக பெரும் பொறுப்புகளில் கூட அமர்ந்தனர் . அமெரிக்காவின் உளவுத்துறையின் முக்கிய பொறுப்பிலும் இவர்களே . CIA இவர்களின் முழு கட்டுபாட்டில் செயல்படுகிறது என்றும் செய்திகள் வெளிபடுகின்றன .

இந்த ரகசிய குழுமம் இல்லுமினடி குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என Alexandra Robbins என்னும் பத்திரிக்கையாளர் கருத்து தெரிவித்து உள்ளார் . அமெரிக்காவை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க அமெரிக்காவின் அரசாங்கம் மற்றும் பல இடங்களின் முக்கிய பொறுப்புகளில் இந்த இல்லுமினட்டி குடும்பங்களின் ஆட்களை அமரவைக்க பயிற்சி கூடமே இந்த Skull and Bones ரகசிய குழுமம் எனவும் கூறுகிறார் . ஆம் யோசித்து பாருங்கள் ஒரு சிறு கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் அமெரிக்க நாடு முழுவதும் பெரும் பதவிகளில் பரவி உள்ளார்கள் .

அதிபர் ஜார்ஜ் புஷ் ,இவரது தந்தை George H. W. புஷ் என அனைவரும் இந்த குழுமத்தை சேர்ந்தவர்கள் தான் . ஏன் முந்தைய அதிபர் ஒபாமாவின் தலைமை பொருளாதார நிபுணர் Austan Goolsbee இந்த குழுவை சேர்ந்தவர்தான் .

2004 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தோ்தலில் John Kerry மற்றும் ஜார்ஜ் புஷ் இருவரும் போட்டி இட்டார்கள் . இவர்கள் இருவருமே இந்த Skull and Bones குழுமத்தை சேர்ந்தவர்கள்தான் . இந்த குழுவில் தான் இருந்தது பற்றி முன்னாள் அதிபர் புஷ் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார் . இந்த ரகசிய குழு பற்றி ஒரு பேட்டியில் புஷ்ஷிடம் கேட்டபொழுது " மனிக்கவும் என்னால் எதுவும் கூற இயலாது " இது தான் அவரது பதில் .

தொலைகாட்ச்சியில் புஷ் ஐ ஒருவன் செருப்பால் அடிக்க முயற்சித்தால் அதை மட்டும் காட்டுவார்கள் .. ஆனால் உண்மையில் நடக்கும் இருள் உலக அரசியலை பற்றி சிறிதும் காட்டமாட்டார்கள் .

இந்த குழுவின் மெம்பர்கள் மற்றும் அவர்களின் இன்றைய பொறுப்புகளை ஒரு அட்டவணை போட்டால் அது நீண்டு கொண்டே போகும் . (தெரிந்த அளவிற்கே இவ்வளவு!)..

வேறு விதமாக சொன்னால் East India கம்பெனி மூலம் இங்கிலாந்து ராணி இந்தியாவை கொள்ளை அடித்து அந்த பணத்தின் மூலம் Elihu Yale ஐ வைத்து Yale பல்கலைகழகத்தை தொடங்கி அதில் ஐரோப்ப ராஜ குடும்பங்களின் வாரிசுகளுக்கு சில ரகசியமான பயிற்ச்சிகள் குடுத்து அவர்களை அமெரிக்காவின் மேல் பொறுப்புகளில் அமரவைத்து அமெரிக்காவையே ஆழ்கிறார்கள். 

                -தொடரும்..... 

Comments

Popular posts from this blog

டைட்டானிக் மர்மங்கள்

Subliminal Messages

இலுமினாட்டி