Subliminal Messages

மூளையில் விதைக்கப்படும் தகவல்கள்-
Subliminal Messages (Corporate's Marketing and Satanic Culture )


Subliminal Messages இவை பொதுவாக ஒரு மனிதனின் மூளையில் அவனுக்கே அறியாமல் தகவல்களை பதியவைக்க பயன்படுத்தப்படும் முறை .ஆம் உங்களுக்கே அறியாமல் உங்கள் குணாதிசியங்களை , விருப்பு ,வெறுப்புகளை இந்த Subliminal Messaging மூலமாக மாற்றமுடியும் .

இந்த Subliminal Messages தொலைகாட்சி நிகழ்ச்சிகள் , திரைப்படங்கள், குழந்தைகளின் கார்ட்டூன் , பிரபல இசை ஆல்பங்கள் , புகை படங்கள் ,விளம்பரங்கள் என நீங்கள் தினம் பார்க்கும் அனைத்திலும் ஒளிந்து இருக்கிறது .
இந்த Subliminal Messages ஐ corporate நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பயன்படுத்துகின்றன . இது வரை வெளிவந்த Subliminal Messages களில் மிக குறைவான அளவையே நாம் கண்டுபிடித்து உள்ளோம் .. பல subliminal தகவல்கள் நமக்கு தெரியாமல் இன்னும் வளம் வந்து கொண்டு இருக்கின்ற காலையில் நீங்கள் படிக்கும் செய்தித்தாள் தொடங்கி , தொலைகாட்சி நிகழ்ச்சிகள் , திரைப்பட போஸ்டர்கள் என திரும்பும் அனைத்திலும் இவை ஒளிந்துள்ளன . இந்தியாவில் இது அதிகம் இல்லாவிட்டாலும் உலகமயமாக்களுக்குப்பின் இந்த subliminal தகவல்கள் அதிக அளவில் இங்கும் ஊடுருவி நமது எண்ணங்களில் நஞ்சை கலக்க தொடங்கிவிட்டன  .

முதலில் இந்த Subliminal Messages எப்படி வேலை செய்கின்றன என்று சிறு உதாரணத்துடன் காண்போம் .
நீங்கள் பார்க்கும் பொழுதும் , கேட்டுக்கும் பொழுதும் சரி அனைத்தும் உங்கள் மூலையில் பதிந்து கொண்டே இருக்கும் ஆனால் உங்களால் நினைவுக்கு கொண்டு வர முடிந்தது மிக சிறிய அளவே .. உதாரணத்திற்க்கு ஒரு மேசை முழுவதும் 100 பொருட்களை பரப்பி வைத்து உங்கள் கண்கள்ளுக்கு முன் அதை 1 நொடி காட்டி அந்த பொருட்களை நினைவு கூற சொன்னால் . உங்கள் நினைவில் ஒரு 5 முதல் 6 பொருட்கள் மட்டுமே கூறமுடியும் இதற்க்கு அர்த்தம் உங்கள் மூலையில் அந்த 5,6 பொருட்கள் மட்டுமே பதிந்து உள்ளன என அர்த்தம் அல்ல உங்கள் மூளை அங்கே உள்ள 100 பொருட்கள் அதன் அளவுகள் , நிறம் என அனைத்தும் தெளிவாக அந்த 1 நொடியிலேயே பதிய பட்டிருக்கும் ஆனால் உங்களால் அந்த memory இல் ஒரு 5,6 பொருட்களை மட்டுமே நினைவு கூற முடியும் .

1950களுக்கு முன் சில மேற்கத்திய நாடுகளின் திரையரங்குகளில் திரைப்படம் ஓடிகொண்டிருக்கும் பொது இடையில் ஒரு frame "Hungry ? Eat Pop Corn (பசிக்கிறதா ?popcorn சாப்பிடுங்கள்  " )என்ற வரி போடுவார்கள் .. இதை பார்வையாளர்களால் உணர முடியாது ஆனால் அவர்களின் மூளை அதை உணர்ந்து  பசி உணர்ச்சியை துண்டும் . பசி தானாக வரும் பொழுது பார்வையாளர்கள் கண்டிப்பாக இடைவேளை பொழுது தின்பண்டங்கள் வாங்குவார்கள் .. இது Subliminal Messages இன் தொடக்க நிலை என்று கூறலாம் .


இது போல திரைப்படங்களில் ஒரு சில  frame களில் எதோ ஒரு corporate இன் brand ஒரு ஓரத்தில் இருக்கும் நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள் ஆனால் அந்த பொருள் உங்கள் மூளையில் பதிவாகி இருக்கும் அடுத்த முறை நீங்கள் அதை கடையில் பார்க்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்கள் வாங்க பல வாய்புகள் உண்டு .  இது திரைப்படத்தில் மட்டும் அல்ல நீங்கள் விளையாடும் Computer game களிலும் அதிகம் உண்டு .

சரி இது ஒரு வகை marketing என்று ஒத்துக்கொள்ளலாம் .ஆனால் குழந்தைகள் பார்க்கும் cartoon நிகழ்ச்சியில்ஏன் ஆபாச காட்சிகளை மறைமுகமாக கட்டுகிறார்கள் ?இப்படி கட்டுவதால் அவர்கள் எதுவும் பொருளை  marketing செய்கிறார்களா ? இல்லை ஆபாசத்தை அந்த குழந்தைகளின் பிஞ்சு வயதிலேயே விதைக்கும் திட்டம் தான் இது . ஆம் subliminal தகவல்கள் பற்றி பேசும் பொழுது Disney குழுமத்தை சேர்க்காமல் எப்படி .. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சின்ன சிறு குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் செயலை செம்மையாக செய்து கொண்டு இருக்கிறது disney.


ஒரு சில எடுத்துகாட்டுகள்

- The Lion King படத்தில் மறைமுகமாக  10 க்கும் மேற்பட்ட இடத்தில்  வரும் Sex என்னும் எழுத்து .

- The Little Mermaid படத்தில் ஆண்குறியை Disney கூடாரத்தில் காட்டி இருப்பது .


- Tangled படத்தின் போஸ்டரில் மறைமுகமாக வரும் "SEX "சொல் .

- MONSTERS.INC படத்தில் ஒரு குழந்தை அறையில் ஒரு பெண்ணை ஒருவர் புணர்வது போல் வரைந்து சுவரில் ஒட்டி இருக்கும் . அந்த படத்தில் ஆணுக்கு நேராக - Uncle rogger என்றும் .. பெண்ணுக்கு நேராக - Mommy என்றும் எழுதி இருக்கும் .


- The rescuers படத்தில் ஒரு இடத்தில் ஒரு அரை நிர்வாண பெண்ணின் படத்தை சுவரில் மாட்டி இருப்பார்கள் .

இவை அனைத்தும் குழந்தைகள் பார்க்கும் படத்தில் வந்தவை . இன்னும் பல விடயங்கள் உள்ளன .. கண்டுபிடிக்கபடாத subliminal தகவல்கள் பலவற்றை நாம் தினம் தினம் பார்த்து கொண்டு உள்ளோம் .

நான் கூறிய எடுத்துகாட்டுகள் மிக சிறிய அளவே .. Disney மட்டும் அல்ல இன்னும் பல நிறுவனங்கள் இந்த வகை செய்திகளை குழந்தைகள் மத்தியில் காட்டி வருகின்றன .உங்கள் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகள் எவ்வளவு நல்ல நிகழ்ச்சியாக தெரிந்தாலும் உள்ளே இது போல் சில தகவல்கள் ஒளிந்திருந்து அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வாய்ப்புகள் அதிகம்  .



Walt Disney ஒரு உயர் நிலை freemason இல்லுமினட்டியின் முக்கிய கைப்பாவை .இவரிடம் வழங்கப்பட்ட பொறுப்பு குழந்தைகளின் நெஞ்சில் Racisam மற்றும் ஆபாசத்தை விதைப்பது .

இதில் அமெரிக்க CIA வும் அடக்கம் . ஆம் Subliminal தகவல்கள் உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள் அமெரிக்க CIA உளவாளிகள். "OBEY " என்னும் சொல்லை பல நிகழ்ச்சிகளில் மறை முகமாக பயன்படுத்தி மக்கள் கட்டுக்குள் வைக்க பயன்படுத்தி உள்ளனர் .



இதே போல் ILLUMINATI ஒரு பெரும் அசம்பாவிதத்தை செய்ய போவாதாக இருந்தால் அது நடைபெறுவதற்கு  பல வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூளையில் அந்த விடயம் பற்றிய செய்தியை விதைக்க தொடங்கி விடுவார்கள் .

9/11 இரட்டை கோபுரங்கள் இடிவதர்க்கு முன்பே அது இடிய போவது பற்றி பல கார்ட்டூன் மற்றும் படங்களில் அதை பற்றி குறிப்பால் நமது மூளைக்குள் பதியவைத்து விட்டார்கள் .

உலகம் அழிவது போன்ற பல படங்களை வெளியிட்டு நமது மூளையை அதற்க்கு தயார் செய்து விட்டார்கள் .. உலகம் அழியபோவதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று நான் கூறவில்லை அழிவு சூழ்நிலைக்கான நேரங்களில் நமது மூளை தயார் செய்யபடுகிறது . உதாரணத்திற்க்கு "2012" படம்
இது உலக அளவில் பெரும் அளவில் வெற்றி பெற்றது . நம் தமிழகத்தில் அரசு இப்படத்தை இலவசமாக பள்ளி குழந்தைகளுக்கு காட்டியது ..

படத்தின் கதை ?
உலகமே அழிய போகிறது இதை மக்களுக்கு சொல்லாமல்  பெரிய பொறுப்புகளில் உள்ள மனிதர்கள் மட்டும் தப்பி பிழைக்கிறார்கள் . இந்த படத்தை பார்த்து கை தட்டிவிட்டு வேற நாம் வந்துள்ளோம் .

இது ஒரு உதாரணமே இது போல பல படங்கள் தினம் தினம் நம்  எண்ண ஓட்டங்களில் புகுந்து நம்மை ஆட்கொள்கின்றன .

மீண்டும் சொல்கிறேன் நான் கூறிய விடையங்கள் எள்ளளவே .. இன்னும் ஆகாய அளவிலான subliminal விடையங்கள் அறியபடாமலே உள்ளது .

"இஸ்லாமிய தீவிரவாதிகள்" இன்னும் இந்த வார்த்தையை இன்றும்  நீங்கள் செய்திகளில் கேட்கலாம் . ஒரு மத பிரிவினரின் மீது உலகம் முழுவதும் வெறுப்பு உருவாக்க மிக அழகாக பயன்படுத்திய சொல் "ISLAMIC TERROIST" . ஒரு சில இஸ்லாமிய கூடங்களின் தனிப்பட்ட போரட்டங்கள் (அது தவறோ சரியோ அதை பற்றி நாம் இங்கே வாதிட வரவில்லை ) மொத்தமாக ஒரு மதத்தின் பெயரை அதனுடன் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகள் என சுட்டி அந்த சொல்லை நம் மனதில் விதைத்து விட்டார்கள்  . இங்கே நாம் எப்படி சர்தார்ஜி ஜோக் சொல்லுவது போல் இன்னும் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என சித்தரித்து joke பரவலாக பேசபடுகின்றன .

செய்திகள் மூலம் தான் நமது  பல முடிவுகள் அமைகிறது .
எனவே செய்திகளை பாருங்கள் தெரிந்துகொள்ளுங்கள் அப்படியே நம்பிவிடாதீர்கள் .

ஓரினசேர்க்கை

 பொதுவாக அனைத்து நாட்டு மக்களும் இந்த விடயத்திற்கு எதிராக தான் இருந்தார்கள் பின் எப்படி இது பரவியது ?

திரைப்படங்களில் அதிகமாக கட்டப்பட்டது  மற்றும்
பெரும் நடிகர்கள் , தொழில் அதிபர்கள் ஓரினசேர்க்கை யை ஆதரித்தது .(Timcook - CEO of APPLE , பழைய pope ஓரின சேர்க்கையை ஆதரித்தது )
இதுபோல திரைப்படங்கள் மற்றும் பெரிய மனிதர்களின் கூற்று தான் மக்களின் மத்தியில் இதை பெரிய செய்தியாக ஆக்கியது .

இதை பற்றி செய்திகளை மீடியா அடிக்கடி வெளியிட்டு இது ஒரு தவறு இல்லை என்பது போல் நமது மூளையில் எண்ணத்தை விதைத்துவிடும் .

இன்று பலர் இதற்க்கு ஆதரித்தே முகபுத்தகத்தில் rainbow profile picture வைத்து சுத்திகொண்டு உள்ளார்கள் .

இன்னும் தெளிவாக subliminal தகவல்கள் பற்றி  சொன்னால் சமிபத்தில் கமல் நடித்து வெளிவந்த "பாபநாசம் "படத்தில் கமல் எப்படி பல நபர்களின் மூளையில் ஒரு தேதியை சம்பவத்தை பேசி விதைபாரோ அதே போல் தான் மிக பெரிய அளவில் திட்டமிட்டு  நம் மூளையில் ரகசியமாக தினம் தினம் பல விடயங்கள் விதைக்க படுகின்றன .

இந்த  subliminal தகவல்களை பயன்படுத்தி எப்படி   நமக்கு நாமே  புகை பழகத்தை மறப்பது , நமது வாழ்வை நமது எண்ணங்களை நல்ல வழியில் எடுத்து செல்வது குறித்து சில கருத்தரங்குகளும் நடந்துள்ளன மற்றும் சில புத்தகங்களும் வெளிவந்து உள்ளன .

Comments

Popular posts from this blog

டைட்டானிக் மர்மங்கள்

இலுமினாட்டி